ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, முதலமைச்சரின் முதன்மை செயலாளர்-3 ஆக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிதித்துறை செயலாளராக சித்திக் பொறுப்பேற்கிறார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த உதயச்சந்திரனுக்கு புதிய பொறுப்பு இன்னும் ஒதுக்கப்படாத நிலையில், அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கூட்டுறவுத்துறை பதிவாளராக பணியாற்றி வந்த நந்தகுமார், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த டி. கிறிஸ்துராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கூடுதல் செயலாளராக இருந்த விஷ்ணு, முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அமுதா ஐ.ஏ.எஸ். அதிகாரியும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து, நிர்வாகத்தில் வேகமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
