- Advertisement -
பட்ஜெட் தாக்கல்- வருவாய் பற்றாக்குறை ரூ.30,000-ஆக சரிவு
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அப்போது உரையாற்றிய அவர், “தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அதிகளவு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
திமுக ஆட்சி பதவியேற்றப்போது ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை நடப்பாண்டில் ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் படிப்படியாக குறைக்கப்படும். ஒட்டுமொத்த வருவாய் மதிப்பில் வரிவருவாய் 5.58 சதவீதம் குறைந்ததே வருவாய் பற்றாக்குறைக்கு காரணம்.
கடந்த 2 ஆண்டுகளில் அரசு எடுத்த முயற்சி காரணமாக ஜிடிபியில் 6.9 சதவீதமாக வரிவருவாய் உயர்ந்துள்ளது. தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அதிகளவு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்” என்றார்.