spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (ஜூலை 25) மாலை 06.00 நடைபெற்ற ‘களம் நமதே’ முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தான் முதலமைச்சர் கோப்பை குறித்து அறிவிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது நாட்டின் பாரம்பரியத்தை கலை நிகழ்ச்சிகள் வாயிலாக வெளிப்படுத்தினோம். விளையாட்டு போட்டி நடத்துவோர், விளையாடுபவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும்.

we-r-hiring

நண்பேண்டா….. ஆர்யா, சந்தானம் காம்போவின் பாஸ் என்கிற பாஸ்கரன் 2…. ஷூட்டிங் எப்போது?

சென்னையில் 17 இடங்களில் ஜூலை 1- ஆம் தேதி முதல் ஜூலை 25- ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் பரிசு தரப்பட்டது. கபடி, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளும் முதலமைச்சர் கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியால் விளையாட்டுத்துறை மேம்படுகிறது; விளையாட்டுத்துறை செயல்பாடுகள் பெருமையளிக்கின்றன.

இன்வெஸ்டிகேஷன் திரில்லரில்….. பரத், ரகுமான் கூட்டணி!

தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியைப் பார்த்து பெருமையாக இருக்கிறது. முதலமைச்சர் கோப்பையில் 3.7 லட்சம் பேர் பங்கேற்றதை எனது வெற்றியாகக் கருதுகிறேன். விளையாட்டுப் போட்டிகளை நடத்த சிறப்பான சூழலை உருவாக்குவதில் தமிழக அரசு பாராட்டு பெற்றிருக்கிறது. எங்கள் அணியும் இந்தியா அணி தான்; அந்த அணியின் வெற்றிகாகப் பாடுபடுகிறோம். விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல; நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ