Homeசெய்திகள்தமிழ்நாடு"அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (மே 06) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலரை வெளியிட்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களுக்காக பணியாற்றுவது என்பது எனக்கு புதிதல்ல; 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். தம்மை தாக்குவோரையும் தாங்கி நிற்கும் நிலம் போன்றது திராவிட இயக்கம். என்னால் முடிந்த அளவிற்கு ஓய்வின்றி, என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன்.

we-r-hiring

தங்கம் விலை அதிரடி குறைவு

திராவிட மாடல் என்னவென்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என சொல்வது திராவிட மாடல். திராவிட மாடல் என்றால் என்ன என் கேட்பவர்களுக்கு மக்களின் புன்னகையே பதில். அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் ஆட்சி என்றால் என்னவென்று தெரியும். மக்களுக்கு சம்பந்தம் இல்லாத பதவியில் இருப்பவர்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

சாதி ரீதியான பார்வைக் கொண்டவர்களுக்கு திராவிட மாடல் என்பது புரியாது. தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி என்பது சனாதனம் அல்ல; சமூக நீதி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா; மக்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் ஒரு பலனை பெற்றுள்ளனர். தி.மு.க. ஆட்சி சிலரால் விமர்சிக்கப்படுகிறது; பலரால் விரும்பப்படுகிறது. கடந்த ஆட்சியில் சீரழிந்து கிடந்த துறைகளை நாங்கள் சரி செய்திருக்கிறோம்.

மைதானத்தில் அருகருகே பயிற்சி மேற்கொண்ட தோனி, ரோஹித் சர்மா! (வைரலாகும் வீடியோ)

இரண்டு ஆண்டு சாதனைகளை முழுமையாகக் கூறி முடிக்க இரண்டு நாட்கள் தேவைப்படும். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 6,905 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். கையெழுத்திட்டதோடு மட்டுமில்லாமல் 16 மாவட்டங்களில் கள ஆய்வுகளையும் செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ