spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு… சரம்சரமாய் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்..!

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு… சரம்சரமாய் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்..!

-

- Advertisement -

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை தொடுத்திருக்கிறது. இந்தக் கேள்விகள் மீது தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் தரப்பு ஒருவாரத்தில் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவின் எழுத்துப்பூர்வ நகல் வெளியாகி உள்ளது.ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு… சரம்சரமாய் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்..!அந்த 12 கேள்விகள் இங்கே..

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி, பின்னர் மீண்டும் அந்த மசோதா திருத்தங்கள் உடனோ அல்லது திருத்தங்கள் இல்லாமலோ நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்படும் போது அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என ஆளுநரால் முடிவு செய்ய முடியுமா?

we-r-hiring

மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் என ஆளுநர் முடிவெடுக்கும் போது, அது அனைத்து விதமான மசொதாக்களுக்கும் பொருந்துமா அல்லது இந்த மசோதாக்கள் மாநில அரசுக்கு அப்பாற்பட்ட விவகாரங்களாக கருதப்படும் குறிப்பிட்ட சில மசோதாக்களுக்கு மட்டும் பொருந்துமா?

அரசியல் சாசனப் பிரிவு 200 கீழ் மசோதா மீதான முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் தெரிவிக்க வேண்டும் எனக் கூற முடியுமா? இது போன்ற பரிந்துரைகளின் போது, அரசியல் சாசன பிரிவு 200 கீழ் ஆளுநர், அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டுமா அல்லது தனிப்பட்டு செயல்பாடுகளை மேற்கொள்ள முடியுமா?

அரசியல் சாசன பிரிவு 200 கீழ் நான்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? தனிப்பட்ட அதிகாரம் (pocket veto) என்பதன் செயல்பாடு என்ன? அரசியல் சாசன பிரிவுகள் 111, 200 மற்றும் 201 ஆகியவற்றால் அது உறுதி செய்யப்படுகிறதா? மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படட மசோதா குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கப்படும் போது, மசோதா மீதான ஒப்புதலை கட்டாயம் வழங்க வேண்டுமா அல்லது அவசியம் இல்லையா ?

மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படட மசோதா குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கப்படும் போது, மசோதா மீதான ஒப்புதலை கட்டாயம் வழங்க வேண்டுமா அல்லது அவசியம் இல்லையா ?

மீண்டும் நிறைவேற்றப்பட்டு மசோதா ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் போது , அவர் மத்திய அமைச்சரவையின் அறிவுரையின் கீழ் செயல்படும் பட்சத்தில், அமைச்சர்கள் மசோதாவிற்கு எதிராக மத்திய அரசு அறிவுரை கூறி, மசோதா நிறைவேற்றப்பட்டால் எழும் சூழலை எவ்வாறு அரசியல் சாசன திட்டத்தின் கீழ் கையாள வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது – அமைச்சர் வி.செந்தில்பாலாஜி

MUST READ