தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.
இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அளவிடவே முடியாத அளவிற்கான உடைமைகளையும் பறித்துச் சென்றதோடு, தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று.
காலத்தால் மறக்க முடியாத அளவிற்கு வலியைத் தந்ததோடு, பாதிப்பிலிருந்து மீளவே முடியாத அளவிற்குப் பேரழிவையும், பேரிழப்பையும் ஏற்படுத்திய சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்“ என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.
119 கொடி இந்தியர்களின் விவரங்கள்…காவல்துறைக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை…



