spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒன்றிய அரசுக்கு இசை ஞானம் கிடையாது – வைகோ விமர்சனம்

ஒன்றிய அரசுக்கு இசை ஞானம் கிடையாது – வைகோ விமர்சனம்

-

- Advertisement -

சிம்பொனி அரங்கேற்றம் செய்த இசைஞானி இளையராஜாவை ஒன்றிய அரசு டெல்லியிலிருந்து வரவேற்று புகழ் கொடுத்திருக்க வேண்டும் என  இளையராவை சந்தித்து வாழ்த்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒன்றிய அரசுக்கு இசை ஞானம் கிடையாது என விமர்சித்துள்ளாா்.

ஒன்றிய அரசுக்கு இசை ஞானம் கிடையாது – வைகோ விமர்சனம்

we-r-hiring

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்த இசைஞானி இளையராஜாவை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இசைஞானி இளையராஜா லண்டன் சென்று சிம்பொனியை நடத்தினார். யாராலும் செய்ய முடியாத சாதனையை நம் இளையராஜா சாதித்து காட்டி இருக்கிறார்.  இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் நான் அவரை பாராட்டி பேசியதற்கு ரஜினிகாந்த் எழுந்து விசில் அடிக்க ஆரம்பித்தார்.

தமிழரின் பெருமையை வட நாட்டினர் அறியாதவர் என்பதற்கு உதாரணம் இளையராஜாவின் சிம்பொனி இசையை கொண்டாடமல் இருப்பது நல்ல உதாரணம். இந்தியாவில் அவரின் சிம்பொனி இசை பற்றி வட மாநிலங்களில் தெரிய வேண்டும். இளையராஜவை தமிழ்நாடு அரசு வரவேற்றது போல் டெல்லியில் இருந்து அவரை வரவேற்று புகழ் கொடுத்திருக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு இசை ஞானம் கிடையாது என வைகோ விமர்சித்துள்ளாா்.

தமிழில் பெயர் பலகை கட்டாயம் – மேயர் பிரியா அறிவிப்பு

MUST READ