spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதி மன்றம் திட்டவட்டம்

வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதி மன்றம் திட்டவட்டம்

-

- Advertisement -

வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட சில முக்கிய பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதி மன்றம் திட்டவட்டம்வக்பு திருத்த சட்டம் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பாக வழக்கு தொடரட்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இவ்வழக்கின் விசாரணையை முதலில் விசாரித்த போது கடந்த ஏப்ரல் மாதம் வழக்கில் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியது.

அதில் வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதோரை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது; வக்பு சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் ஆட்சியர்கள் வரையறை செய்யக் கூடாது எனக்கூறியதோடு, மத்திய அரசு வக்பு சட்டதிருத்தத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில் வழக்கின் விசாரணையை அடுத்த தலைமை நீதிபதிக்கு மாற்றுவதாக அறிவித்திருந்தார். அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் பதவியேற்ற பிறகு வழக்கின் விசாரணை  தொடர்ந்து நடைபெற்று வந்தது.

we-r-hiring

இவ்வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வு கிடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதில் ஒரு விஷயத்தை அனுமானம் செய்வது எப்போதும் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாகவும் அருதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தலையிடுவதற்கு ஆதரவாகவும் இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது. எனவே இந்த வழக்கில் முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழுமையான முகாந்திரங்களை நாங்கள் காண முடியவில்லை என தலைமை நீதிபதி தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கில் குறிப்பிட்ட சில உத்தரவுகளை பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி கூறினார். அதன்படி,

  1. ஒரு நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே வக்பு வழங்க முடியும் என்ற திருத்தத்திற்கு தடை விதிக்கிறோம். எந்த ஒரு வழிமுறையும் இல்லாமல் இது தன்னிச்சையான அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என நீதிபதிகள் கருத்து.
  2. தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகள் மீது முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது! இது அதிகாரப் பிரிவினையை மீறும் என தீர்ப்பு.
  3. வக்பு நிலம் தொடர்பாக தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது என தீர்ப்பு.
  4. வக்பு நிலம் தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை விதித்து தீர்ப்பு.
  5. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என தீர்ப்பு.
  6. ஒருவர் வக்பு வழங்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற விதிக்கு தடை; ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவரா? என்பதை தீர்மானிப்பது தொடர்பான விதிகளை மாநில அரசுகள் உருவாக்கும் வரை விதிக்கு தடை என தீர்ப்பு.
  7. வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
  8. அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அனுமதிக்கும் திருத்தத்தை நிறுத்தி வைக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு.
  9. “வக்பு வாரிய திருத்த சட்டம் 2025” – முழு சட்டத்திற்கும் தடை விதிக்க முடியாது சில பிரிவுகளுக்கு மட்டுமே தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ள நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான மூல வழக்கு நிலுவையில் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தீர்ப்பின் முழு விவரங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உச்சநீதிமன்ற இணையத்தில் பதிவேற்றம் செய்த பிறகு உறுதியாக தெரிந்து கொள்ள முடியும்.

தொடர்ந்து விமர்சிக்கப்படும் தனுஷ்…. கஸ்தூரிராஜா பற்றி பிரபல இயக்குனர் பேசியதை வைரலாக்கும் ரசிகர்கள்!

MUST READ