spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் S.I.R கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன்...

கோவையில் S.I.R கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன் குமார் தகவல்….

-

- Advertisement -

கோவை மாவட்டத்தில் 85 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தகவல் அளித்துள்ளாா்.கோவையில் S.I.R கணக்கீட்டு படிவம்  வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன் குமார் தகவல்….தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கணக்கீட்டு படிவத்தை  வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் வழங்கி, சிறப்பு முகாம்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு  படிவங்களை திரும்ப பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் எஸ்.ஐ .ஆர் பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின்  இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம், குள்ளக்காபாளையம் ஆகிய கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று எஸ். ஐ. ஆர்., பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது வாக்காளர்களிடம் சரியான முறையில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கபட்டதா, கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று வாக்காளர்களிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் எஸ். ஐ. ஆர்., பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் திவாரி பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கோவை மாவட்டத்தில் எஸ்.ஐ. ஆர்., பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை திரும்ப பெற வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரடியாக வாகனங்களில் சென்று திரும்பப் பெரும் பணியும் நடைபெற்று வருவதாகவும், இதுவரை கோவை மாவட்டத்தில் 85 சதவிகித வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, 50 சதவிகித கணக்கீட்டுப் படிவங்கள் திரும்ப பெற்று தொடர்ந்து எஸ்ஐ.ஆர்., பணிகள் நடைபெற்று வருவதாகவும், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தெரிவித்துள்ளாா்.

பாஜக மாமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

we-r-hiring

MUST READ