Homeசெய்திகள்தமிழ்நாடுதேனி தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

தேனி தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

-

 

தேனி தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

தேனி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அப்போது வேட்பாளர் டிடிவி தினகரன் அளித்த வாக்குறுதிகள் பின்வருமாறு காண்போம்! தேனி மாவட்டம், உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகே நேதாஜி சிலை அமைக்கப்படும். பெரியகுளம், போடியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். தேனி மக்களவைத் தொகுதியில் கேந்திரிய வித்யாலயா, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் வைகை அணை தூர்வாரப்படும்; முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை தொகுதி மக்களுக்கு அவர் அளித்துள்ளார்.

சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடையடைப்பு!

தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ