Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது : செல்வப்பெருந்தகை

கலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது : செல்வப்பெருந்தகை

-

கலைஞர் அவர்களுக்கு தமிழக அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது. இவ்வளவு காலங்களாக கலைஞர் மீது வசைப்பாடிய பாஜக இனிமேலாவது திருத்தி திரும்பப் பெற வேண்டும்  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.

கலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது : செல்வப்பெருந்தகைமுன்னாள் பிரதமர் ராஜீ்வ்காந்தியின் 80 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை சின்னமலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும் அவரது திருவுருவப்படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது,

எங்களுடைய தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 80வது பிறந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் பேரியக்கத்தாலும், தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக காலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவாலயத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இப்பொழுது சைதாப்பேட்டையில் பகுதியில் இருக்கிற திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம்.

உலகம் முழுவதும் ஜனநாயக மாண்புகளை உள்ளாட்சி அமைப்புகளில் பேசப்படுகிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் ராஜீவ்காந்தி தான் என தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட மெட்ரோவிற்கு 20,000 கோடி தருவதாக கூறினார்கள் வேலை ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இன்னும் தரவில்லை. முதலமைச்சர் மாநில நிதியிலிருந்து அதற்காக நிதி ஒதுக்கி இருக்கிறார். வரலாறு காணாத காட்டாற்று வெள்ளம், பெருமழை வந்தது இதுவரைக்கும் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் இது பற்றி எல்லாம் முருகன் பேச மாட்டாரா என கேள்வி எழுப்பினார்

ரயில்வேவிற்கு  ஒன்றிய அரசு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பாக 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு 23ஆம் தேதியில் இருந்து ஆயிரத்தி ஒரு ரூபாவை எல்லா மாவட்ட தலைவரும், வட்டாரத் தலைவரும் தமிழ்நாட்டு மக்களும் பிரதமர் மோடி அவர்களுக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும்  ரயில்வே துறை அமைச்சருக்கும் அனுப்பி வைக்க உள்ளோம் என தெரிவித்தார்.

உண்மையை பேசத் தெரியாதவர்கள் தான் பாஜக தலைவர்கள்.  பிரைம் மினிஸ்டர் ஆவாஸ் யோஜனாவின் திட்டதில் பெருவாரியான பணம் தமிழ்நாடு அரசால் தரப்படுகிறது.70% தமிழ்நாடு அரசினுடைய நிதியை வைத்துக்கொண்டு பெயர் மட்டும் பிரதமர் ஆவாஸ் யோஜனா என்று வைத்துக் கொள்கிறார்கள் என கூறினார்.

கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து நாணயம் வெளியிட்டுள்ளது. கலைஞருக்கு யார் யாரெல்லாம் பாராட்ட‌ வருகிறார்களோ அதை நாங்கள் வரவேற்கிறோம். அதில் அரசியல் கிடையாது எனவும் இவ்வளவு காலங்களாக கலைஞர் மீது வசை பாடி குற்றங்கள் வைத்த பாஜக இனிமேலாவது திருத்தி திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

MUST READ