spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் உள்ளது - த.வெ.க தலைவர் விஜய் குற்றச்சாட்டு 

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் உள்ளது – த.வெ.க தலைவர் விஜய் குற்றச்சாட்டு 

-

- Advertisement -

அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, பேசிய விஜய், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஐ ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஜனநாயகத்தின் ஆணி வேரே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் தான். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என தோன்றுவதாக தெரிவித்த விஜய், தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு நியமிக்கப்பட வேண்டும் என்பது  வலிமையான வேண்டுகோள் என குறிப்பிட்டார்.

ஃபெஞ்சல் மழை பாதிப்பின்போது சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடறதும், அறிக்கை விடறதும், மழையில் நீரிலிருந்து போட்டோ எடுக்குறதும்… தனக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடில்லை என்றும், ஆனால் நாமும் சம்பிரதாயத்துக்காக சில நேரம் அதுபோன்று செய்ய வேண்டியுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். மேலும், மக்களோடு உரிமைகளுக்கா, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அவர்களது உரிமைகளுக்காக தான் இருப்பேன் என்றும் விஜய் உறுதி அளித்தார்.

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு ‘200 வெல்வோம்’ என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு… மக்களோடு இணைந்து தான் விடுக்கும் எச்சரிக்கை”… நீங்கள் உங்களின் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்களின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என திமுக அரசை விமர்சித்தார்.

மேலும், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டதாகவும், அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் இருப்பதை தன்னால் யூகிக்க முடிந்தாலும், திருமாவளவனின் மனம் முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும் என்றும் விஜய் கூறினார்.

MUST READ