spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம்… அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு…

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம்… அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு…

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம்… அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு…திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சி பிள்ளையார் அருகே தீபம் ஏற்றுவதுதான் வழக்கம் என்றும் ஆனால் வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

we-r-hiring

இந்த வழக்கு சொத்து உரிமை சார்ந்தது என்பதால் உரிமையியல் வழக்கு மூலமே தீர்வு காண முடியும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது. சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டுமென சில இந்து அமைப்புகள் நோட்டீஸ் வழங்கினர். அதனால், மனுதாரர் உள்நோக்கத்துடன் வழக்கை தாக்கல் செய்துள்ளாா். இந்து முன்னணி என்ன சொல்லி உள்ளதோ அதையும் மனுதாரரும் தெரிவித்துள்ளாா் என்று திடமாக தெரிவித்தது.

திட்டமிட்டே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பிரச்சனை பெரிதாக்கப்பட்டுள்ளது என்றும், மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடுவது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும். உச்சநீதிமன்றம் கூறியுள்ள அறிவுரைகளை நீதிபதிகள் பின்பற்ற வேண்டும்.  கோயில் வழிபாடுகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனவும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும்  அரசு தரப்பில் மேற்கோள் காட்டப்பட்டது.

இருதரப்பினரும் அமைதியான வாழக்கூடிய சூழ்நிலையில் தேவையில்லாமல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடாது. அதனால் இவ்வழக்கில் திருப்பரங்குன்றம் மலையில் மற்ற இடங்களில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கூடாது என்ற வாதங்கள் அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவில் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்,
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகில் தீபம் எற்ற கோர தனி நபருக்கு உரிமையே கிடையாது. அப்படி தர்கா அருகே தீபம் ஏற்ற அனுமதித்தால் இதுபோன்ற பல வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக, டிசம்பர் 2025இல் வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று வெளியானது. தீர்ப்பை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர். கடந்த 18 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை மதுரை கிளை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். பொது அமைதி பாதிக்கும் என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் வாதம் தவறானது என்றும் கருதினர். மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதமும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றுதான் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்று கூறினார்.

பொது அமைதி பாதிக்கப்படும் என அரசுக்கு வருவது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் கூறப்பட்டது. தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தீபம் ஏற்றப்பட  வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மதுரை கிளை நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

மக்கள் கனவை அறியும் புதிய திட்டம் அறிமுகம்…திராவிட மாடல் அரசின் புதிய முயற்சி – அன்பில் மகேஸ்

 

MUST READ