Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!

திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!

-

 

திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.

திருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது – பிரதமர் மோடி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை முனைவர் ந.அருள் ஆகியோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ