Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!

தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!

-

 

தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் மின்வாகன் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு!

தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் வியட்நாம் நிறுவனம் வின்ஃபாஸ்ட் ஆலையை அமைக்கிறது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூபாய் 16,000 கோடி முதலீட்டில் மின்சார கார் ஆலையை அமைக்கிறது. இந்த ஆலையால் சுமார் 10,000 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுவர்.

முதற்கட்டமாக ரூபாய் 4,000 கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆலை அமைகிறது. பின்னர், படிப்படியாக ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 50 நாட்களில் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

மொத்தம் ரூபாய் 16,000 கோடி முதலீட்டில் தென் தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் மின்வாகன தொழிற்சாலை இதுவாகும். கார் ஆலை அடிக்கல் நாட்டும் விழாவில் வியட்நாம் நாட்டு பாரம்பரிய முறைப்படி வழிபாடுகள் நடைபெற்றது.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

அடிக்கல் நாட்டு விழாவில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ