
தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ராமராஜன் பட நாயகி
சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் தொப்பூர் கணவாயில் உள்ள இரட்டைப் பாலத்தில் நேற்று (ஜன.24) மாலை 06.00 மணியளவில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த லாரி, முன்னே சென்றுக் கொண்டிருந்த இரண்டு லாரிகள், மூன்று கார்கள் மீது மோதிக் கொண்டு கோர விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது. மற்றொரு லாரி, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
பின்னர் தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவத் தொடங்கியது. லாரியில் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதும் அணைத்தனர்.
அத்துடன், கருகிய நிலையில் மூன்று உடல்களை மீட்ட தீயணைப்புத்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.
மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து
இந்த விபத்து காரணமாக, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.