Homeசெய்திகள்தமிழ்நாடுகீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

-

 

மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் காயார் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் சுமார் 300 அடி ஆழமுள்ள PMT கல்குவாரி உள்ளது. அதில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி.

பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

இந்த கல்குவாரி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தீபக் சாரதி (20), முகமது இஸ்மாயில் (19),விஜய் சாரதி (19) ஆகியோர் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். சுமார் ஐந்து மாணவர்கள் குளிப்பதற்காக  PMT கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.

இதில் இரண்டு மாணவர்கள் கல்குவாரியின் கரையில் இருந்துள்ளனர்.மற்ற மூன்று மாணவர்களும் குளித்து கொண்டியிருக்குபோது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். தகவல் அறிந்த மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள்

தற்போது 1 மாணவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.மற்ற இரண்டு மாணவர்களின் உடல்களை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. மீட்கபட்ட ஒரு மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ