நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி வீட்டில் தற்கொலை! சொந்த கிராமத்திற்கு மாணவியின் உடலை கொண்டு சென்றனர். உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதது நஞ்சை உருகச் செய்தது. தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று மாணவியின் உறவினர்கள் கண்ணீர் மல்க வந்தவாசியில் பேட்டி அளித்துள்ளாா்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊரப்பாக்கத்தில் பெற்றோருடன் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, தீடிரென தற்கொலை செய்து கொண்டுள்ளாா். மாணவியின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதது நெஞ்சை உருகச் செய்தது. மாணவியின் உடல் சொந்த கிராமமான வந்தவாசி அடுத்த ராயனந்தல் கிராமத்திற்கு கொண்டு வந்தாா்கள்.
வந்தவாசி அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மனைவி தேவி இவர்களுக்கு தேவதர்ஷினி(19) மற்றும் பிரியதர்ஷினி(17) என்று இரண்டு மகள்கள் உள்ளனர். செல்வராஜ் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தேவதர்ஷினிக்கு மருத்துவராக வேண்டும் என்று கனவு இருந்து வந்த நிலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்து எப்படியாவது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைத்து படித்து வந்தார். ஆனால் தேவதர்ஷினிக்கு பயம் இருந்து வந்த நிலையில் நீட் தேர்வு நெருங்க நெருங்க தேவதர்ஷினிக்கு பயம் அதிகரித்து, மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவதர்ஷினி ஊரப்பாக்கம் ஐயஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கிளாம்பாக்கம் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தேவதர்ஷணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்கள். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் தேவதர்ஷணியின் உடலை சொந்த கிராமமான வந்தவாசி அடுத்த ராயனந்தல் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்து வீட்டின் முன்பு உடல் வைக்கப்பட்டது.
அப்போது தேவதர்ஷணியின் உடலைப் பார்த்து உறவினர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழதது நெஞ்சை உருகச் செய்தது. மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் பல்வேறு மாணவிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் உள்ள நடுத்தர மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று கண்ணீர் மல்க கூறி உள்ளனர்.மேலும் நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக தேவதர்ஷினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராயனந்தல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – டி.ஆர்.பாலு எச்சரிக்கை