
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா (வயது 16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.
“கர்நாடகா எப்போதுமே முரண்டு பிடிக்கும்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (வயது 16), சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள வீட்டில், மீரா இன்று (செப்.19) அதிகாலை 03.00 மணியளவில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.
மன அழுத்தம் காரணமாக மீரா, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர், மீரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
“அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறேன்”- சீமான் ட்வீட்!
உயிரை மாய்த்துக் கொள்வது மனிதக் குலத்திற்கு எதிரானது, இந்த எண்ணங்களைத் தவிர்க்க, இலவச ஆலோசனைக்கு 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.