spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெண் வி.ஏ.ஓ. மீது நடந்த தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

பெண் வி.ஏ.ஓ. மீது நடந்த தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

விழுப்புரத்தில் தேர்தலின் போது பெண் வி.ஏ.ஓ. மீது நடந்த தாக்குதலுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்தியன் 2 முதல் பாடல் ரிலீஸ்… சென்னையில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு…

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர், சகோதரி சாந்தி, கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சி சகோதரர்கள், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாகப் பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி.

ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாகச் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான தி.மு.க.வினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம்.

வன்முறையை கிளப்பும் வீர தீர சூரன் 2… சென்னை போலீஸில் புகார்…

பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துளளார்.

MUST READ