Homeசெய்திகள்தமிழ்நாடுமரங்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…

மரங்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…

-

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில்  மரம் அடுக்கும் பணியின் போது மரங்கள் சரிந்து விழுந்ததில் பாரம் தூக்கும் தொழிலாளி பலி…

மரங்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில் இருந்து சோலூர்மட்டம் செல்லும் சாலையில் அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றும் பணி கடந்த வாரம் முதலே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கீழ் கோத்தகிரி அருகேயுள்ள கன்னிமாரியம்மன் கோவில் பகுதியில் மரம் அறுக்கும் பணி நடைபெற்று,அறுக்கப்பட்ட மரங்களை லாரியில் அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அடுக்கி வைக்கப்பட்ட மரங்கள் சரிந்ததில் பாரம் தூக்கும் தொழிலாளியான அழகுசுந்தரம்(35) என்பவரின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்தது.இதில் சம்பவ இடத்திலேயே அழகுசுந்தரம் பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக கீழ் கோத்தகிரி வனத்துறையினர் மற்றும் சோலூர்மட்டம் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அழகுசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

MUST READ