Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை … சென்னை வானிலை ஆய்வு மையம்…

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை … சென்னை வானிலை ஆய்வு மையம்…

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மே16 முதல் 20 வரை 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை … சென்னை வானிலை ஆய்வு மையம்…தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மே16 முதல் 20 வரை 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு விடப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று கூறிய வானிலை ஆய்வு மையம் அடுத்த,

23 மாவட்டங்களில் 3மணி நேரத்தில் தமிழ் நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மாலை 5.30 மணிக்குள் 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடலூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகா் மழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை … சென்னை வானிலை ஆய்வு மையம்…தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு என்றும் தெரிவித்ததோடு,

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட13 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மே 19-ல் கள்ளக்குறிச்சி,கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு 7 மாவட்டங்களில் மே19ல் கனமழைக்கு வாய்ப்பு மற்றும் மே20-ல் நீலகிரி, கோவை, சேலம்,  உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறிய வானிலை ஆய்வு மையம்

தற்போது கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்… வீடியோ வைரல்…

MUST READ