spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

-

- Advertisement -

ஆவடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

we-r-hiring

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துஉள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்தவச்ச பெருமாள் திருக்கோவில் பூரண அமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் திருமுல்லைவாயில் கிராம பொது நல சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் கடந்த மூன்று நாட்களாக யாகசாலைகள் அமைத்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க இன்று காலை ஆலயத்தில் மேல் வைக்கப்பட்டுள்ள விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி தீபாரதனை காட்டி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவில்  கிராம பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் திருமுல்லைவாயில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

MUST READ