Homeசெய்திகள்தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது  - விஜய் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.

தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது  – விஜய் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.

-

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது  - விஜய் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் பேசிய பேச்சுகளை பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக “அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?” என்று திராவிட இயக்கங்களையும், திமுகவையும் கேட்டார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், பாசிசம் என்றால் என்ன என்று தெரியாமல் விஜய் பேசுகிறார். அவருக்கு யாரோ எழுதிக் கொடுத்ததை மாநாட்டு மேடையில் பேசியுள்ளார் என்று விமர்சனம் செய்தார்.

“தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது” – விமர்சகருக்கு மிரட்டல் விடுத்த ஜோஜூ ஜார்ஜ்

 

அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடமும் தமிழ்தேசியமும் வெவ்வேறானது. இரண்டும் ஒன்றல்ல என்று விமர்சனம் செய்து வருகிறார். விஜய் நடத்திய மாநாட்டிற்கு பின்னர் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தவெக கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள்  கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் சில முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

MUST READ