spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மின்னல் வேகத்தில் திருட்டு - சுமுகமாக கைவரிசையை காட்டும் கொள்ளையர்கள்

மின்னல் வேகத்தில் திருட்டு – சுமுகமாக கைவரிசையை காட்டும் கொள்ளையர்கள்

-

- Advertisement -

மின்னல் வேகத்தில் வந்து ஒரு நிமிடத்தில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ள சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தெலுங்கானாவில் நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் அஜ்மிரா மாலு .இவர் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வருகிறார்.இந்நிலையில் அஜ்மிரா மாலு நேற்று காரில் 5 லட்சம் ரூபாய் பணம் வைத்து கொண்டு காரில் சென்ற பொழுது மதிய உணவிற்காக அவர் காரை உணவகத்தின் வாசலில் விட்டுவிட்டு சாப்பிடுவதற்காக சென்று உள்ளார்.அப்போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

அஜ்மிரா மாலு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து பார்த்த பொழுது கார் கண்ணாடி உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவர் காரில் பார்த்த பொழுது அதிலிருந்த 5 லட்சம் பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. உடனே அவர் ஹோட்டல் நிர்வாகியிடம் கூறி ஹோட்டல் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளனர்.

we-r-hiring

மின்னல் வேகத்தில் திருட்டு

அதில் இருவர் இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து ஒரு நிமிடத்தில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். உடனே அஜ்மிரா மாலு அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அஜ்மிரா மாலு பணம் வைத்திருப்பதை தெரிந்து நோட்டமிட்டு தான் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதுகுறித்து மர்ம நபர்கள் யார் என்று போலீசார்  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ