- Advertisement -
ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.