- Advertisement -
சென்னை அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் அறிவித்ததை அடுத்து தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது தியாகராயர் நகரில் திடீரென கொட்டிய மழையால் சாலையில் மழைநீர் பாய்ந்தோடியது.