spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இந்தோனேசியா: எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

இந்தோனேசியா: எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

-

- Advertisement -

இந்தோனேசியா: எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

 

we-r-hiring

இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எரிபொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இந்தோனேசியா நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் இந்த கிடங்கில் இருந்து தான் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சேமிப்பு கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தன. இந்த பயங்கர தீ விபத்தில் 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த தீ விபத்து சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமம் அடைந்தனர். தகவல் அறிந்து 52 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அப்போது மின்னல் தாக்கியதில், தீ பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

MUST READ