ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு
ஈரானில் ஹிஜாபை சரியாக அணியவில்லை என கூறி கடந்தாண்டு, 22 வயது பெண் கைது செய்யப்பட்டார். போலீசாரின் கொடூர தாக்குதலுக்கு ஆளான அவர், காவலர்களின் கஸ்டடியிலேயே உயிரிழந்தார். இந்த துயர நிகழ்வால் கொந்தளித்து போன ஈரான் மக்கள், அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. இதையடுத்து போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட சிலருக்கு அந்நாட்டின் சுப்ரீம் தலைவர் கடந்த மாதம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். அந்தவரிசையில் தற்போது 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.