spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்"ராஜபக்சே சகோதரர்களே காரணம்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

“ராஜபக்சே சகோதரர்களே காரணம்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

-

- Advertisement -

 

"ராஜபக்சே சகோதரர்களே காரணம்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
File Photo

இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

we-r-hiring

“இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

ராஜபக்சே குடும்பத்தினர், முன்னாள் அதிகாரிகள் உள்பட 13 பேருக்கு எதிராக தனியார் அமைப்பு தொடுத்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நவாப் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள், அலட்சியம் ஆகியவை தான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

“கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் நடத்தும் பேரணி”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இலங்கையில் கொரோனா காலக்கட்டத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஏற்பட்ட போராட்டங்களின் காரணமாக, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் பதவியில் இருந்து விலகினர். பின்னர், ரணில் விக்ரமசிங்கே நாட்டின் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டு, நிதி நெருக்கடிக்கு தீர்வுக் காணும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

MUST READ