
வெனிசுலா நாட்டின் தலைநகர் கரகஸையும் (Caracas), நாட்டின் கிழக்கு பகுதியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த கனரக வாகனம், நின்றுக் கொண்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியது.

அரசு மடிக்கணினிகள் திருட்டு – டிடிவி தினகரன் கேள்வி ???
இந்த கோர விபத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். காவல்துறையினர், மீட்புப் பணிகளை துரிதப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.
இந்த விபத்தில், 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் கவலைக்கிடமான நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உயர்தர தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
விபத்து குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.