spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ராகுல்காந்தி தீவிரவாதியா? ஹெச். ராஜா மீது புகார்

ராகுல்காந்தி தீவிரவாதியா? ஹெச். ராஜா மீது புகார்

-

- Advertisement -

ராகுல் காந்தியை தேச துரோகி என்று விமர்சனம் செய்த எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் பரிசு தொகை அளிக்கப்படும் என உத்திரபிரதேச மாநில அமைச்சர் ஒருவர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தமிழக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் எச்.ராஜா ராகுல்காந்தி ஒரு தேச துரோகி என கூறி இருந்தார். இது காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராகுல் காந்தியை தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மற்றும் கொலை மிரட்டல் விடும் வகையில் பேசிய நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் தளபதி பாஸ்கர் மற்றும் கக்கன் பேத்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொது செயலாளர் தளபதி பாஸ்கர் எங்கள் தலைவர் மீது தரக்குறைவாக பேசிய எச்.ராஜா உள்ளிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர் புகாரை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார

MUST READ