கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கூலி, குறைவாக வழங்கப்படுகிறது எனவும் இதனால், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்கள் கடும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகின்றனர் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் அடிப்படைக் கூலியில் 15 சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் வரும் 28ஆம் தேதியன்று அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நெசவுக் கூலி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் நிலையில் அக்டோபர்.28-ல் குடியாத்தத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது மற்றும் அர்த்தமில்லாதது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பதிலலித்துள்ளார்.
