spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க - மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க – மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்

-

- Advertisement -

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவரின் பைக் சாகசத்தால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க - மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்

we-r-hiring

சென்னை கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றாா். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில் அவர் ஈடுபடும் பைக் சாகசம், மற்ற வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சமடையச் செய்துள்ளது. கோயம்பேடு பாலத்தின் மீது அல்லது கீழே என பின்சக்கரத்தை தூக்கியபடியும், முன்சக்கரத்தை தூக்கியபடியும் அந்த இளைஞர் பைக் சாகசத்தில் ஈடுபடுகிறார்.

சில நேரங்களில் தனியாகவும், சில நேரங்களில் நண்பர்களுடன் இணைந்தும் சாகசம் செய்கிறார். அவ்வாறு சாகசம் செய்வதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்குகளை பெறுகிறார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகியுள்ள நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

MUST READ