spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘மரியாதைக்காகத்தான் ராமதாஸூக்கு அழைப்பு’: முறுக்கும் திமுக- மறுக்கும் பாமக

‘மரியாதைக்காகத்தான் ராமதாஸூக்கு அழைப்பு’: முறுக்கும் திமுக- மறுக்கும் பாமக

-

- Advertisement -

“ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது மூத்த அரசியல்வாதியான ராமதாஸ் அவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக கருதுகிறோம். இதற்காக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’’ என பாமவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Ramadoss mkstalin

we-r-hiring

இந்நிலையில், விரைவில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கத்தையும் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகள் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார்.

இதை வைத்தே வட மாவட்டங்களில் இப்போது அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. 2019-ல் விக்கிர​வாண்டி இடைத் தேர்தல் பிரச்​சா​ரத்​துக்காக வந்த திமுக தலைவர் ஸ்டாலின், திண்டிவனம் – விழுப்புரம் சாலையில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்​தவர்​களின் நினைவுத்​தூண்​களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், ஸ்டாலின் அங்கு வரக்கூடாது என பாமகவினர் மல்லுக்கு நின்றதால் ஸ்டாலின் அந்த முயற்சியைக் கைவிட்​டார்.

இதுகுறித்து பாமகவினர், “தேர்தல் பிரச்​சா​ரத்​தில்கூட, இட ஒதுக்​கீட்டு போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து எவ்வித வாக்குறு​தியும் ஸ்டாலின் அளிக்க​வில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவிடத்​துக்கு தன்னை வரவிடாமல் செய்து​விட்​டார்களே என்ற ஆதங்கத்​தில், முன்னாள் அமைச்சர் ஏ.கோ​விந்​த​சாமிக்கு நினைவு அரங்கம் கட்டுவதற்​கும், இட ஒதுக்​கீட்டுப் போராட்ட தியாகிகள் நினைவு மணிமண்டபம் கட்டு​வதற்​குமான முயற்சிகளை முன்னெடுத்தார் ஸ்டாலின்.

ஆனால் இதையெல்லாம் செய்பவர், வன்னியர் உள் இடஒதுக்​கீட்டு விஷயத்தில் விரைந்து செயல்​பட்டு அதை அமல்படுத்து​வதற்கான முயற்சிகளை எடுக்​காதது ஏன்?” என்று கேள்வி எழுப்​பினர்.

இதனிடையே, மணிமண்டப திறப்பு விழாவின் போது, வன்னியர்​களுக்கான உள் இடஒதுக்​கீட்டை முதல்வர் அறிவிக்க வேண்டும் எனச் சொல்லி இருக்​கிறார் மருத்​துவர் ராமதாஸ். இந்த விழாவில் கலந்து​கொள்ள ராமதாஸுக்கும் அழைப்​பிதழ் அனுப்​பப்​படும் என தெரிவித்​திருக்​கிறார் அமைச்சர் பொன்முடி.

ராமதாஸ்

இதற்கு நடுவே, “ராமதாஸூக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விட்டுக்​கொண்​டுள்​ளார்” என முதல்வர் காட்டமாக கருத்துச் சொன்னதும் வன்னியர் வட்டாரத்தில் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்​கிறது. ‘மருத்​துவர் ராமதாஸுக்கு மக்கள் நலன் குறித்து சிந்திப்​பதும், அவர்களுக்காக குரல் கொடுப்​பதும், அரசின் குறைகளை சுட்டிக்​காட்டு​வதும் தான் வேலை’ என பதில் கொடுத்​திருக்​கிறார் அன்புமணி துபாயில் இருக்கும் மருத்​துவர் ராமதாஸ் 28-ம் தேதி தான் தமிழகம் திரும்​பு​கிறார். இந்நிலையில், விழுப்புரம் விழாவில் வன்னியர் இட ஒதுக்​கீட்ட அறிவிக்க வேண்டும் என பாமகவினர் ஒன்றியம் வாரியாக தீர்மானம் நிறைவேற்றி ஆட்சி​யரிடம் மனு அளிக்க முடிவெடுத்​துள்ளனர்.

இத்தகைய சூழலில், விழாவில் பாமக பங்கெடுக்குமா என பாமக சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டதற்கு, “வன்னியர்​களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்​கலாம் என உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சிறு முயற்​சியும் மேற்கொள்ள​வில்லை.

M.K.Stalin

இப்படியான சூழலில் மணிமண்டபம் திறப்பதாக கூறி சமூகநீதி தொடர்பான எங்களின் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் முயற்​சியாக இது மாறிவிடக் கூடாது. இந்த விஷயத்தில் வன்னியர்கள் இப்போது விழிப்பாக உள்ளனர். இட ஒதுக்கீடு தொடர்பான மருத்​துவர் ராமதாஸின் கடிதத்​திற்கு அரசின் பதிலைப் பொறுத்தே பாமக இந்த விழாவில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்​கும்” என்றார்.

பாமகவின் நிலைப்பாடு குறித்து திமுக ஆதரவாளர்கள், ‘‘இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால், மணி மண்டபம் திறக்காதா? மரியாதைக்காக அழைப்பு அனுப்படுகிறது. அதை புறக்கணித்தால் இழப்பு பா.ம.க-வுக்குத்தான்’’ என்கின்றனர்.

MUST READ