spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமமிதா பைஜுவை அடித்த விவகாரம்....இயக்குனர் பாலா சொன்ன விளக்கம்!

மமிதா பைஜுவை அடித்த விவகாரம்….இயக்குனர் பாலா சொன்ன விளக்கம்!

-

- Advertisement -

இயக்குனர் பாலா தற்போது வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. மமிதா பைஜுவை அடித்த விவகாரம்....இயக்குனர் பாலா சொன்ன விளக்கம்!இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேசமயம் பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை மமிதா பைஜுவும் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் சூர்யா வெளியேறிய பின்னர் மமிதா பைஜுவும் இந்த படத்திலிருந்து வெளியேறினார். இதற்கு காரணம் இயக்குனர் பாலா மமிதாவை படப்பிடிப்பு தளத்தில் வைத்து அடித்து விட்டார் அதனால் தான் மமிதா வணங்கான் படத்திலிருந்து வெளியேறினார் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இது தொடர்பாக இயக்குனர் பாலா விளக்கம் தந்துள்ளார். மமிதா பைஜுவை அடித்த விவகாரம்....இயக்குனர் பாலா சொன்ன விளக்கம்!அதன்படி அவர் கூறியதாவது, “அந்த பொண்ணு என்னோட மகள் மாதிரி. ரொம்ப சின்னப் பொண்ணு. யாராவது அடிப்பாங்களா? படப்பிடிப்பின் போது ஒரு மும்பை ஆர்டிஸ்ட் எனக்கு மேக்கப் பிடிக்காது என்று தெரிந்தும் மமிதாவிற்கு மேக்கப் போட்டுவிட்டார். ஷாட் ரெடி ஆனதும் மமிதா மேக்கப் போட வந்தார். அப்போது யாரு மேக்கப் போட சொன்னது என்று கையை ஓங்கினேன். அதற்கு அடித்து விட்டதாக பரப்பி விட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மமிதா பைஜுவும், இயக்குனர் பாலா தனக்கு அப்பா மாதிரி என்றும் அவருக்கும் தனக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

MUST READ