Homeசெய்திகள்க்ரைம்புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!

புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!

-

- Advertisement -

ஆந்திராவில் நள்ளிரவில் நேரத்தில் புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்டுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடன் பறித்து கொண்டு ஓடிய  சம்பவம் பெரும் பரபரப்பு.

புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆசிரியையாக வேலை செய்பவர் ராஜலட்சுமி. அவர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 31ம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு பேரில் ஒருவன் ராஜலட்சுமி இருக்கும் பகுதியில் பைக்கில் இருந்து இறங்கி ராஜலட்சுமியை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தான். மற்றொருவன் பைக்கை சற்று தூரத்தில் நிறுத்தி தப்பி ஓட தயார் நிலையில் இருந்தான்.

இந்த நிலையில் அவரை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த திருடன் ராஜலக்ஷ்மி கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க தாலியை அபகரித்து கொண்டு வேக வேகமாக ஓடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் ஏறிய நிலையில் இரண்டு பேரும் தப்பிச் சென்று விட்டனர். ராஜலட்சுமி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.

தொழில் பார்ட்னராகி தொல்லை… நொறுங்கிப் போன கணவன்… மனைவியின் சித்ரவதையால் தற்கொலை..!

ஆனால் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் பற்றி ராஜலட்சுமி அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி சி டி வி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்கள் இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ