சமூகநீதி போராட்டத்தில் உயிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்து தந்ததற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.
1987 ம் ஆண்டு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை போற்றிடும் விதத்தில், விழுப்பும் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 5.70 கோடியில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் கடந்த 28 ம் தேதி திறந்து வைத்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி, காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை தனித்தனியே சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதலமைச்சரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தொகுதி பிரச்சனைகள் குறித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்ததாகவும், நம் நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின் பாஸ்போர்ட் காலாவதியானால் அதை புதுப்பித்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கலாம் எவ்விதமான பிரச்சனைகளையும் அவர்கள் தமிழ்நாட்டில் செய்யவில்லை அவர்களை ஒன்றிய அரசு மூலமாகவே கைது செய்யக்கூடாது .சிறப்பு முகாம்களில் அடைக்கக் கூடாது உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தையும் முதலமைச்சருடன் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் கடலூர் முதுநகரில் தவாக நிர்வாகி சங்கர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்பதை முதலமைச்சரிடம் கூறியதாகவும், ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக உள்ள கூட்டமைப்பினர் முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டித் திறந்த முதலமைச்சருக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். வன்னியர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்திருக்கிறோம். மறைந்த காடுவெட்டி குருவுடைய பிறந்தநாள் விழாவிற்கு அனுமதி கேட்டிருந்தோம் அரசும் அனுமதி அளித்தது அதற்கும் நன்றி தெரிவித்தோம். காடுவெட்டி குரு வெங்கல சிலை அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்தோம் அதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதலமைச்சர் இடம் வைத்திருக்கிறோம். நிறைவேற்று தருவதாக உறுதி அளித்துள்ளார்.
வன்னியர் கல்வி அறக்கட்டளையை, ராமதாஸ் அறக்கட்டளையாக மாற்றி வைத்துள்ளார் அதை மீட்க வேண்டும் என முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்துள்ளோம் . புது சொத்து வாரியத்தின் கீழ் அந்த சொத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததாகவும், முதலமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார். மேலும் பேட்டியளித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்த தந்த முதலமைச்சருக்கு நன்றி என்றார்.
இந்து அல்லாத 18 ஊழியர்கள் நீக்கம்… திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி..!