spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமத்திய அரசுக்கு எதிராக போராடிய வழக்கு: விசிக எம்.எல்.ஏ விடுதலை..!

மத்திய அரசுக்கு எதிராக போராடிய வழக்கு: விசிக எம்.எல்.ஏ விடுதலை..!

-

- Advertisement -

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஆறுபேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மத்திய அரசுக்கு எதிராக போராடிய வழக்கு: விசிக எம்.எல்.ஏ விடுதலை..!வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், வட மாநிலங்களில் அதற்கான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 தேதி அதிமுக ஆட்சியின்போது, சென்னை அண்ணா சாலை, மற்றும் அதன் அருகேயும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த போரட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி நடைபெற்ற சாலை மறியல் போரட்டத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர்,பாலாஜி, செல்லதுரை, செல்வம், அப்துல் ரகுமான், ஜெகன்,வெங்கடேசன்  ஆகிய 6 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இரண்டு வழக்குகளை பதிவு செய்தது.

we-r-hiring

இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடைபெற்றது. காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்னிலைப்படுத்தி வாதங்கள் வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயவேல், ஐந்து பேரையும்  விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்

MUST READ