spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்'.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிபி சத்யராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’…. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

சிபி சத்யராஜ் நடித்துள்ள டென் ஹவர்ஸ் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்'.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ் ஸ்டுடென்ட் நம்பர் 1, வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் இவர் வெளியான நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, மாயோன், சத்யா போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் டென் ஹவர்ஸ் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிபி சத்யராஜ் தவிர கனகராஜ், ஜீவா ரவி, திலீபன், சரவணன் சுப்பையா மற்றும் வளர நடித்திருக்கின்றனர். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் இயக்கியிருக்கிறார். பைவ் ஸ்டார் நிறுவனமும் டுவின் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. கே. சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்க ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

we-r-hiring

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் ஏற்கனவே பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போன இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ