வங்கதேச நாட்டைச் சேர்ந்த 33 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனா்.
சென்னை மாங்காடு குன்றத்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். டெல்லி போலீசார் அளித்த தகவலின் பெயரில் ஆவடி காவல் ஆணையரகத்தில் 27 நபர்களும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 6 பேர் என மொத்தம் 33 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் 27 நபர்களை மாங்காடு காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 6 நபர்கள் குன்றத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே டெல்லியில் பதுங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த சந்த் மியா என்ற நபரை டெல்லி போலீசார் கைது செய்து, நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ஆவடி காவல் ஆணையரகத்தில் 27 நபர்களும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 6 நபர்களையும் கைது செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு