இயக்குனர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் போட்டி போட்டு படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் இதற்காக தைவானில் டென்ட் அடித்துள்ளனர்.

தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் தைவான் நாட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து இயக்குனர் சங்கர் தைவான் நாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதற்கு போட்டியாக கமலஹாசன் தனது மாஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் மற்றும் நடிகர் இருவரும் மாறி மாறி போட்டா போட்டி போட்டுக் கொண்டு புகைப்படங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.



