spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதமிழ்நாடு வச்சதுதான் சட்டம்! மும்மொழியை தூக்கிப் போடு! பாஜகவை பந்தாடிய உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு வச்சதுதான் சட்டம்! மும்மொழியை தூக்கிப் போடு! பாஜகவை பந்தாடிய உச்சநீதிமன்றம்!

-

- Advertisement -

மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கல்வி உரிமை, குழந்தைகள் உரிமையில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என்று உச்சநீதின்றமே சொல்லியுள்ளது என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கு குறித்தும், அதன் மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள சிறப்பு வாய்ந்த தீர்ப்பு குறித்தும் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் அளித்த நேர்காணலில்
கூறியிருப்பதாவது:-  புதிய கல்விக்கொள்கை அதன் வாயிலாக மும்மொழி கொள்கை, இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. இவை எல்லாம் குலக்கல்வியின் ஒரு வடிவம்தான் என்று சொல்கிறோம். உடனே பலரும் தமிழ்நாட்டிற்கு வேறு வேலை இல்லை. டெல்லி எதாவது ஒரு திட்டம் கொண்டுவந்தால் இது சனாதனம். இது குலக்கல்வி திட்டம். இப்படியா பேசுவது? நாங்கள் நவீனமாக புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறோம். அடுத்தக் கட்டத்திற்கு கல்வித்தரத்தை உயர்த்த போகிறோம். உடனே இது பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோருக்கு எதிரானது. தமிழ் மொழிக்கு எதிரானது. இந்தியை திணிக்கப்பார்க்கிறாங்க என்றெல்லாம் சொன்னாங்க, அப்படினு சொல்லிதான் இதை கொண்டுவந்தார்கள். ஆனால் இவர்கள் மூன்றாவது மொழி என்று சொல்வதே இந்தியை திணிக்கத்தான் என்று நாம் சொன்னோம். ஆனால் அப்போது வலதுசாரிகள் எல்லாம் மறுத்தார்கள்.

கடைசியாக மகாராஷ்டிராவில் அடி வாங்கினார்கள். பாஜக ஆட்சி செய்கிற மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக நாங்கள் இந்தியை கொண்டு வருகிறோம் என்று சொன்னபோது, மராத்தியர்கள் திரண்டதால் அடி வாங்கினார்கள். இப்போது உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. இந்த புதிய கல்விக்கொள்கை. மும்மொழி கொள்கை எல்லாம் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்தில் அந்த மாநில அரசுகள் விரும்பினால்தான் கொண்டுவர முடியும் என்றும், அந்த மாநில அரசுகளை இதை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றோ, இது அடிப்படையான கல்வி உரிமை என்றோ என்கிற அடிப்படையில் வராது என்று உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை: அடம்பிடிக்கும் தர்மேந்திர பிரதான்... விடாப்பிடியாக முதல்வர் ஸ்டாலின்..!

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதின்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  மும்மொழி கொள்கையை தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்த சொல்லுங்கள். அது கல்வி உரிமை என்றெல்லாம் சொல்லியுள்ளார். அதற்கு உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது, மும்மொழி கொள்கை இல்லாததால் தமிழ்நாடு என்ன கெட்டுப் போய்விட்டது என்று. அதற்கு நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். டெல்லியில் வசிக்கிறேன். என்னால் இந்தி படிக்க முடியவில்லை. இதனால் நான் கஷ்டப்பட்டேன் என்று சொல்லியுள்ளார். அதற்கு உச்சநீதிமன்றம், அதனால் என்ன தற்போது டெல்லியில் தானே இருக்கிறீர்கள். இங்கே இந்தி படிக்க வேண்டியதுதானே. உங்களை யார் இந்தி படிக்க வேண்டாம் என்று சொன்னது என கேள்வி எழுப்பியுள்ளது

இவர்கள் தமிழகம் மீதும், தமிழக மாணவர்கள் மீதும் எந்த விதமான அக்கறையும் இல்லாமல் குதர்க்கமாகவே செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு தான் உச்சநீதிமன்றம்  பொட்டில் அடித்தாற்போல் சொல்லியுள்ளது. இவர்களுடைய உண்மையான நோக்கம் இந்திய படிக்க வேண்டும் என்பதுதான். மற்றபடி இந்தியால் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் எங்கும் பயன்படாது. வடஇந்தியர்கள் இங்கு வருகிறபோது அவர்களுக்கு எளிமையாக இந்தி புரிய வேண்டும் என்பதற்காக நம்மை இந்தி படிக்க சொல்கிறார்கள். சம்பந்தமே இல்லாத ஒருவர் டெல்லியில் உள்ளாராம். அவருக்கு  தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டுமாம். ஏனென்றால் அவர் டெல்லியில் சிரமப்படுகிறாராம். ஏதாவது ஒரு வாதம் புரிகிறதா? ஒரு மாதம் டெல்லிக்கு போனால் இந்தி படித்துவிட போகிறார்கள். இவர் ஒருவர் டெல்லிக்கு போவதற்காக, அமெரிக்கா, கனடா, ரஷ்யாவுக்கு வேலைக்கு போகிற அளவுக்கு  தரமிக்க கல்வியாக இருக்கிற தமிழர்கள் எதற்கு இந்தி படிக்க வேண்டும். அதற்கு அவன் கணிதம் படித்து வேறு லெவலுக்கு போய்விடுவான். ஒன்று அறிவியலை படிக்கிறான். அல்லது அவனுக்கு பயன்படக்கூடிய ஆங்கிலத்தை படிக்கிறான். அல்லது அவனது தாய்மொழியான தமிழை படிக்கிறான். அதை விடுத்து ஒரு புண்ணியத்திற்கும் பயன் இல்லாத இந்தியை ஏன் அவன் படிக்க வேண்டும்.

இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

புதிய கல்விக்கொள்கை மூலம் எல்லோரையும் முன்னேற்றப் போகிறோம் என்கிறார்கள். என்ன முன்னேற்றப் போகிறார்கள்? 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வில் பொதுத்தேர்வு என்கிறார்கள். இது தான் நீங்கள் முன்னேற்றுகிற லட்சணமா? காலங்காலமாக பிள்ளைகளை எப்படியாவது பள்ளிக்கூடத்திற்கு வரவழைக்க வேண்டும் என்று ஆல்பாஸ் போட்டு, சத்துணவு போட்டு, டிரெஸ் கொடுத்து, பெண்களுக்கு பாஸ் கொடுத்து இப்படியாக ஏழை எளிய பிள்ளைகளைக் கூட பொருளாதாரமாகவோ, பெண் என்பதாலோ அல்லது கிராமப்புறத்தை சேர்ந்தவர் என்பதாலோ ஒருவர் பள்ளிக் கூடத்திற்கு வருவது தடைபட்டு விடக்கூடாது என்று நீதிக்கட்சி காலத்தில் இருந்து பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு. ஆனால் நீங்கள் உங்க சிஸ்டத்தை கொண்டுவந்த அடுத்த நிமிடமே 3ஆம் வகுப்போடு பிள்ளையை பெயில் ஆக்குகிறீர்கள். 7, 8 வயது குழந்தையை பெயில் ஆக்கினால் அந்த குழந்தை என்ன குழந்தை சைகாலஜியா என்ன ஆகும். இதன் மூலம் பிள்ளைகள் பள்ளிக் கூடத்திற்கு வரக்கூடாது என்று நினைக்கிறீர்கள். 12ஆம்வகுப்பு தேர்வில் அரியலூரை சேர்ந்த மாணவிதான் முதலிடம் பிடித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கை என்பது ஏழை, கிராமப்புற மாணவர்களை தான் பாதிக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதிய கல்விக்கொள்ளை கொண்டு வருகிற போதே தமிழ்நாடு, இது பிராமணர் அல்லாத மாணவர்களை பாதிக்கும்.  ஒடுக்கப்பட்ட , கிராமப்புற பிள்ளைகளை படிக்க விடாமல் செய்வதற்கான சதி என்று அன்றைக்கே கணித்து சொன்னது. ராஜாஜிக்கள் என்ன என்ன வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாடு கண்டுபிடித்துவிடும். ஏனென்றால் இங்கே ஈரோடு கண்ணாடி இருக்கிறது. அதன் மூலம் எளிமையாக கண்டுபிடித்து விடலாம். மற்ற மாநிலங்களில் அந்த கண்ணாடி இல்லாததால் பட்டு அனுபவித்து நட்டமான பிறகுதான் கன்னடத்துக்காரர்கள் இந்தியை அழி என்கிறார்… மம்தா பானர்ஜி திகைக்கிறார்… இந்தி எதிர்ப்பு, ஆளுநர்  எதிர்ப்பு குறித்து 1971லேயே கலைஞர் ராஜமன்னார் குழு அமைத்தாரா? என்று மிரண்டு பார்க்கிறார். ஆளுநர் எதிர்ப்பில் பஞ்சாப், கேரளா மாநிலங்கள் தமிழ்நாடு போன்று இருக்கிறார்கள். எனவே எல்லாவற்றுக்கும் வழிகாட்டியாக தமிழ்நாடு இருக்கிறது. இன்றைக்கு நாடு முழுக்க பிற்படுத்தப்பட்ட மக்கள் இடஒதுக்கீட்டில் படித்துக்கொண்டிருப்பதற்கு அன்றைக்கு பெரியார் நடத்திய போராட்டம் தான் காரணமாகும்.

எப்படியாவது தமிழ்நாட்டை காலி செய்ய வேண்டும் என்று ஒரு பாஜக வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாட்டை மும்மொழி கொள்கையை அமல்படுத்த சொல்கிறபோது, உச்சநீதிமன்றம் அப்படி எதும் சட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மும்மொழி கொள்கை என்பது ஒரு குழந்தையின் அடிப்படை உரிமையா? இந்தி படிப்பது என்ன தமிழ்நாட்டு குழந்தையின் அடிப்படை உரிமையில் வருகிறதா? என்று உச்சநீதிமன்றம் பந்தாடியுள்ளது. எந்த அடிப்படையில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியாக வேண்டும் என்று நான் சொல்ல முடியும்.

ஒரு குழந்தைக்கான அடிப்படை கல்வி உரிமை, மாநில அரசின் திட்டத்தால் பாதிக்கப்படுகிறது என்றால் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்க முடியும். ஆனால் தமிழ்நாடு அரசு சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் என்று எந்த பிரிவும் பாதிக்கப்படக்கூடாது என்று பார்த்து பார்த்து செய்கிற அரசாக உள்ளது. அதை சிதைக்கும் விதமாக அவர்களை இந்தி படிக்க வைப்பது. 3ஆம் வகுப்பிலே பெயில் ஆக்குவது. இவற்றை எல்லாம் ஒரு குழந்தையின் அடிப்படை உரிமையாக கொண்டுவர முடியாது. உங்களின் தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க சொல்லி என்னால் உத்தரவிட முடியாது. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகத்தான் இருக்கும். கல்வி உரிமை, குழந்தைகள் உரிமையில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என்று உச்சநீதின்றமே சொல்லியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ