- Advertisement -
சேலம் மாவட்டம் சங்ககிரியில் 9 மாத குழந்தை ஓடும் பேருந்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில், 9 மாத குழந்தை தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்தது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையின் கையில் வைத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. திடீரென ஓட்டுநர் பிரேக் பிடித்ததால், குழந்தை தவறி விழுந்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனா். அந்த புகாரின் பேரின் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


