spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜகவை எதிர்க்கும் ராமதாஸ்! இறுதியில் வெல்வது யார்? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

பாஜகவை எதிர்க்கும் ராமதாஸ்! இறுதியில் வெல்வது யார்? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

-

- Advertisement -

ராமதாஸ், அன்புமணி மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக அவருக்கு அதிமுகவிடம் இருந்து ராஜ்யசபா எம்.பி இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாமகவில் நடைபெறும் மோதல்கள் குறித்தும், அதிமுகவின் எம்.பி சீட் ஒதுக்கீடு தொடர்பாகவும் தராசு ஷ்யாம் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- அதிமுகவில் 2 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்படும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, அன்புமணிக்கு எம்.பி. பதவி கிடைக்கக்கூடாது என்று அவர் செய்திருக்கிறார். மேலும் பாஜக அதிமுக எதிர்ப்பையும அவர் வெளிப்படுத்தி உள்ளார். அப்போது அன்புமணிக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். அதிமுக – பாஜக கூட்டணி இல்லாவிட்டால் தாங்கள் தனியாக செல்வோம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 1996ல் பாமக தனியாக 4 இடங்களில் வென்றதாக சொல்லும் மருத்துவர் ராமதாஸ், அது 30 வருடங்களுக்கு முன்பு நடந்தது என்பதை மட்டும் மறக்கிறார். அப்படி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு என்பது கிடையாது. 30 வருடங்களுக்கு முன்பு இருந்த சித்தாந்தங்கள் இன்றைக்கு இல்லை.

Ramadoss

1957ஆம் ஆண்டு வெறும் திராவிட சித்தாந்தங்களை மட்டும் வைத்துக்கொண்டு அண்ணாவால் 15 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. 70 வருடங்களுக்கு முன்பு சித்தாந்த அடிப்படையில் மட்டும் வெல்ல முடிந்தது. 1962ஆம் ஆண்டிலேயே அண்ணா கூட்டணிக்கு சென்றுவிட்டார். 1967ல் ஆட்சியை பிடித்தபோது முழுமையான கூட்டணி அமைத்திருந்தார். அதற்கு காரணம் என்ன என்றால்? அதற்குள்ளாக வாக்காளர்களின் எண்ணம்  மாறிவிட்டது. புதிய வாக்காளர்கள் வந்துவிட்டார்கள். ஒரு கட்சி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதியவர்களை உள்ளே சேர்த்துக்கொண்டு வாக்காளர்களை ஈர்க்க வேண்டும். அப்போது, மருத்துவர் ராமதாஸ், 1996ஆம் ஆண்டில் 4 இடங்களில் தனியாக வெற்றிபெற்றேன். அதே சித்தாந்தம், அதே போராட்டம் என்று சொல்லி இப்போதும் நான்  ஜெயிப்பேன் என்று ராமதாஸ் நினைத்தால், அதிமுக தலைமை செயற்குழு என்ன முடிவை எடுக்கும். அவர்கள் நம்ம கட்சியிலேயே 2 பேருக்கு கொடுக்கலாம் என்று தான் முடிவு எடுக்க முடியும். எனக்கு தெரிந்து அன்புமணிக்கு சீட்டு இல்லை என்கிற முடிவை நோக்கி அதிமுக செல்லும்.

அன்புமணி ராமதாஸ்

ராமதாஸ் பாஜக கூட்டணியை எதிர்ப்பதற்கு காரணம் அன்புமணி மீது உள்ள வழக்கு என்பது அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. ஆனால் உண்மையான காரணம் அவர்களுக்கு தான்தெரியும். ஆனால் பாஜகவை மருத்துவர் ராமதாசுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் பாஜக வளர்ந்து வருவது தமிழ்நாடு அரசியலுக்கு நல்லதல்ல. என்னுடைய அனுபவத்தில் பாஜக இப்படியான வெறுப்பு பிரச்சாரத்தை வைத்து அரசியல் செய்தால், அது எடுபடாது. அண்ணாவே பிராமண எதிர்ப்பை கைவிட்ட பின்னர் தான், ராஜாஜியுடன் கூட்டணி வைத்தார். வாக்கு அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு ஏற்றாற் போல் பேச வேண்டி வரும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஏன் அண்ணா சொன்னார்? ஏன் திராவிட நாடு கொள்கையை அண்ணா கைவிட்டார். இது மாறிக்கொண்டே இருக்கிற விஷயமாகும்.அதே மாறுதலுக்கு உட்பட்டதுதான் அனைத்துக்கட்சிகளும். பாமக உள்பட. அப்படி இல்லை என்று ராமதாஸ் சொன்னார் என்றால் அவர் இன்னும் பழைய சித்தாந்தங்களிலேயே உள்ளார் என்றுதான் அர்த்தம். ஆனால் அதற்கு ஆதரவு அளித்து போராடவோ, தியாகங்களை செய்யவோ புதிய தலைமுறை வராது.

kalaignar

பாமகவின் தலைமை பொறுப்பை அன்புமணிக்கு மாற்றிக்  கொடுத்துவிட்ட பிறகு, கட்சியின் நிறுவனர் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்த முடியுமா? 1980களில் மு.க.ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவரான போது, திண்டுக்கல் அய்யலூரில் கூட்டம் போட்டார்கள். அந்த கூட்டத்தில் ஸ்டாலின் மிகவும் சின்ன பையனாக பேசினார். கலைஞ கட்சியின் செயல் தலைவராக 2015ஆம் ஆண்டில் நியமித்தார். இதற்கிடையே, எம்எல்ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வராக்கிய போதும், கலைஞர் கட்சி தலைவர் பொறுப்பில் அமர வைக்கவில்லை. அதற்கு காரணம் அது மிகவும் அதிகாரம் மிக்க பதவியாகும். அதற்கு பிறகு அவரது உடல்நிலை, பல்வேறு காரணங்களால் இயல்பாக தலைவராக மாறினார். அப்போது குடும்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தது. ஆனால் அமைதியாக கையாண்டு விட்டனர். அப்படி பிரச்சினை இல்லாமல் கையாள வேண்டும் என்றால் குடும்ப சண்டை வெளியே வரக்கூடாது. ஆனால் மருத்துவர் ராமதாஸ் வெளியே கொண்டு வந்துவிட்டார்.

வைகோ போர்க்கொடி தூக்கியபோது, திமுகதான் எங்கள் கட்சி. உதயசூரியன்தான் எங்கள் சின்னம் என்று உரிமை கோரினார். தேர்தல் ஆணையத்திற்கு பிரச்சினை செல்கிறபோது கலைஞர் அனைத்து ஆவணங்களையும் முறையாக தாக்கல் செய்தார். அனைத்தும் கலைஞருக்கு சாதகமாக தான் இருந்தது. வைகோவால் மதிமுக தான் கொண்டுவர முடிந்தது. இன்றைக்கு அந்த கட்சி திமுகவில் உள்ளது. ராமதாசுக்கு தற்போது 85 வயதாகிறது. வயது ஒரு தடையாகும். கட்சிக்கு உழைப்பை தரக்கூடிய நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருக்கு வயது முக்கியமாகும். பாமக என்கிற கட்சி அன்புமணிக்கா, ராமதாசுக்கா என்று வருகிறபோது, சட்ட ரீதியாக என்ன முடிவு வரும். கட்சி பதிவு சட்டம் என்றைக்கு வந்ததோ அன்று முதல் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்கிறது. மருத்துவர் ராமதாசோ, ஜி.கே.மணியோ பொதுக்குழுவை கூட்டி, ராமதாஸ் தனது கருத்துக்களை முன்வைத்தால் இன்னும் பல விஷயங்கள் வெளியே வரும். ஆனால் அது எந்தவிதமான முடிவை நோக்கி செல்லும். இறுதியில் அன்புமணிக்குதான் கட்சி என்று முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ