ஆவடி காவல் ஆணையரங்கம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 1500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை காவல் ஆணையர் சங்கர் துவக்கி வைத்தார்.சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் கொண்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
ஆவடி காவல் ஆணையர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் 50 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவ மாணவிகள் பங்கேற்று போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து காவல் ஆணையர் துவக்கி வைத்த மாரத்தான் போட்டி ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில் இருந்து ஆவடி அண்ணா சிலை வரை சென்று சுமார் 5 கிலோமீட்டர் இலக்கு கொண்டு நடத்தப்பட்டது.

இதற்காக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு மாரத்தான் போட்டி நடந்தது சாலையில் ஏராளமான மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் சென்றது அனைவரது கவனத்தை பெற்றது வெற்றி பெற்ற முதல் மூவருக்கு ரொக்க பரிசும் 50 பேருக்கு ஆறுதல் பரிசு கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் ஆணையர் சங்கர் வழங்கினார்.
இது ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு போட்டியாகும் இதில் இணை ஆணையர் பவானிஸ்வரி, துணை ஆணையர் அய்மன் ஜமால் உள்ளிட்ட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளரை சந்தித்த ஆணையர் கூறுகையில்,போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆவடி காவல் ஆணையரகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, போதையில்லா தமிழகத்தை உருவாக்க நாங்கள் அனைவரும் பாடுபடுவோம்
கடந்த 2024 ம் ஆண்டில் 40 பேர் போதை பொருள் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 20 க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதை பொருட்கள் மீதான நடவடிக்கை தீவிரமாக எடுத்து வருவதாகவும். குறிப்பாக குட்கா ,கூல் லீப், ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளாா்.
செங்கல்பட்டில் 15 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு