spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் அறிந்து வேதனை-துணை முதல்வர்

ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் அறிந்து வேதனை-துணை முதல்வர்

-

- Advertisement -

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ – மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என துணை முதலமைச்சா் ஸ்டாலின் கூறியுள்ளாா்.ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் அறிந்து வேதனை-துணை முதல்வர்மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, ”ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது. இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது மாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்” என்று கூறியுள்ளாா்.

பள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி-செல்வப்பெருந்தகை

we-r-hiring

MUST READ