வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று (07.07.2025) நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர், திரு.கு.செல்வப்பெருந்தகை, திருப்பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க சென்ற போது, அவருக்கு அநீதி இழைத்து சமூக பாகுபாடு காட்டுப்பட்டுள்ளது.
குடமுழுக்கு நடத்தப்பட்ட விமான தளத்திற்கு செல்ல கு.செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாமல், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு ஆகம விதிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் காரணமாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கு.செல்வப்பெருந்தகை, அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்னதாக சென்ற பாஜக முன்னாள் தமிழ்நாடு தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தரராஜனை அறநிலையத்துறை அதிகாரிகள் விழுந்து, விழுந்து வரவேற்று, உபசரித்து, குடமுழுக்கு விமானதளத்தில் இருக்கை போட்டு அமர வைத்துள்ளனர்.தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பழம் பெரும் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கு.செல்வப் பெருந்தகை அங்கு சென்ற போது, அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், அலட்சியப்படுத்தியுள்ளனர். குட முழுக்கு நேரத்தில் கொடியசைக்கும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இதிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஆண்டவன் முன்பு அனைவரும் சமம் என்ற நிலைக்கு மாறாக, அப்பட்டமான பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகள் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு, அரசின் நோக்கத்தை சிதைத்துள்ள நிகழ்வுக்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று கூறியுள்ளாா்.
விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி ஆவேசம்…
