இன்ஸ்டாகிராம் மூலம் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விவாகரத்து பெறப் போவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் அவரது கணவர் பருபள்ளி காஷ்யப் விவாகரத்து செய்து கொண்டனர். சாய்னா நேவால் நேற்று இரவு சமூக ஊடகங்களில் பருபள்ளி காஷ்யப்பை விவாகரத்து செய்ததாக பதிவிட்டு இருந்தாா். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாயினா். தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் பிரிய முடிவு செய்தனா்.
சாய்னா நேவால் ஹரியானாவின் ஹிசாரில் பிறந்தவா். 30 வயதில் சாய்னாவும் அரசியலில் நுழைந்தார். சாய்னாவும், பருபள்ளியும் டிசம்பர் 14, 2018 அன்று திருமணம் செய்து கொண்டனர். சாய்னா 2020-ல் பாஜக கட்சியில் சேர்ந்தார். தனது விவாகரத்து குறித்து சாய்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ நாங்கள் இருவரும் நிறைய யோசித்த பிறகே இந்த முடிவை தோ்வு செய்தோம். வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது.

அமைதி, முன்னேற்றம் மற்றும் ஓய்வுக்கான பாதையை நாங்கள் இருவரும் தேர்வு செய்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த நினைவுகளுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் எதிர்காலத்திற்கு உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சாய்னா நேவால் கூறியுள்ளாா்.
அதிரடியாய் உயரும் தங்கத்தின் விலையால் சாமான்ய மக்கள் அவதி! தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்வு!