spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கடலூர் அதிமுக முன்னால் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை…முக்கிய ஆவணங்கள்  பறிமுதல்

கடலூர் அதிமுக முன்னால் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை…முக்கிய ஆவணங்கள்  பறிமுதல்

-

- Advertisement -

பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாசெல்வம் உட்பட அவரது கணவர், மகன் என குடும்ப உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் புதிய வழக்கு பதிந்துள்ளனர்.கடலூர் அதிமுக முன்னால் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை…முக்கிய ஆவணங்கள்  பறிமுதல்கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம். 2016-2021 காலகட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அதிமுகவின் மகளிர் அணி மாநில துணை செயலாளர் பதவி வைக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் 17 மணி நேரம் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

we-r-hiring

ஆவணங்கள் அடிப்படையில் வருவாய்க்கு அதிகமாக 571 சதவீதம் சொத்து குவித்துள்ளதை கண்டுபிடித்ததன் அடிப்படையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாசெல்வம் உட்பட அவரது கணவர், மகன் என குடும்ப உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் புதிய வழக்கு பதிந்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு… மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

MUST READ